புதன், 16 செப்டம்பர், 2009

ethirparathathu

விவேக் மீது போலீசில் புகார்!

கே.கே. நகரில் விவேக்குக்கு சொந்தமான வீடு உள்ளது. அதில் எழுத்தாளர் சுப்ரஜா 2005-முதல் குடியிருந்து வருகிறார். சுப்ரஜாவின் மகன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை வீட்டை காலி செய்ய வேண்டாம் என்று விவேக் சொன்னதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விவேக் தரப்பிலிருந்து வீட்டை காலி செய்ய சுப்ரஜாவுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், வாடகைப் பணத்தை வாங்க மறுத்ததாகவும் போலீஸில் கொடுத்த புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும், விவேக் சிலருடன் சுப்ரஜாவின் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை உடைத்து, வீட்டை காலி செய்ய மிரட்டி விட்டுச் சென்றதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுப்ரஜா கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: நடிகர் விவேக் வீட்டில் 2005ம் ஆண்டு முதல் ரூ.7 ஆயிரத்துக்கு வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். கடந்த டிசம்பர் மாதம் என்னிடம் வாடகை வாங்கப்படவில்லை. இந்நிலையில் விவேக்கின் உதவியாளர் வீட்டைக் காலி செய்யும்படி மிரட்டினார். அவரும் தொலைபேசியில் மிரட்டினார். எனது வாடகையை மணி ஆர்டர் மூலம் அனுப்பினேன். அது திரும்பி வந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகாரில் கூறப்பட்டிருந்தது. இப்புகாரின்படி கே.கே.நகர் போலீசார் விவேக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக விவேக் கூறியதாவது கே.கே.நரில் உள்ள வீட்டுக்கு எனது சகோதரி வர உள்ளார். அப்பகுதியிலே அவரின் மகனை படிக்கவைப்பதே வசதியாக இருக்கும் என்றதால் 3 மாதத்துக்கு முன்பே சுப்ராஜாவிடம் வீட்டைக் காலி செய்யும்படி கூறியிருந்தேன். 3 வருடமாக அந்த வீட்டுக்கு நான் போகவில்லை. அவர் கொடுத்தது பொய் புகார் ஆகும் என்றார்.


My latest books

http://books.dinamalar.com/AuthorBooks.aspx?id=740

நானும் கடவுளும்! (சிறுகதை)
ஏப்ரல் 04,2009,10:19 IST
வாரமலர்

- சுப்ரஜா

அறுபத்தொன்பது தூக்க மாத்திரைகள், பையன், மனை விக்கு கொடுக்க வைத்திருந்த மன அழுத்த மாத்திரைகள் என, எண்பதுக்கும் மேல் வாயில் மொத்தம், மொத்தமாய் போட்டு தண்ணீர் குடித்து விழுங்கினேன்.


கண்களை மெல்ல மூடினேன்... யாரோ தட்டி எழுப்ப எழுந்தேன்...


எதிரே வெள்ளை நிற உடையில் தீட்சண்ய பார்வையுடன் இருந்தவர், ""எழுந்து உட்கார்,'' என்றார்.


உட்கார்ந்தேன்.

""யார் நீங்கள்?''

""நான் கடவுள்...'' தங்கப் பற்கள் தெரிய சிரித்தார்.

""நான் எப்படி நம்புவது?''

""உன்னை சாவின் விளிம்பிலிருந்து மீட்டு உட்கார வைத் திருக்கிறேன். நீ சாப்பிட்ட மாத்திரைகளுக்கு நீ எப் பொழுதோ இறந்திருக்க வேண்டும். உன் கூட்டிலிருந்து ஆவி வெளியேறி இருக்கும். எதற்காக இந்த முயற்சி?''

""நான் நினைத்த எதுவும் நடக்கவில்லை. வீட்டின் சூழல் சரியில்லை. நண்பர்கள் ஓரிருவரை தவிர யாரும் இல்லை. என்னிடம் பணம் இல்லையென் றால், யாரும் நம்ப மறுக்கின்றனர். நான் பொய் சொல்கிறேன் என்கின்றனர்...

""என்னுடைய திறமைகளுக்கு இங்கு மதிப்பில்லை. எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. என்னை விட திறமை இல்லாதவர்கள் நிறைய சம்பாதிக்கின்றனர்; சந்தோஷமாய் இருக்கின்றனர். என் மனைவி, இரண்டு மகள் யாரும் என்னை மதிப்பதில்லை...''

""உன் மீது எந்த தவறும் இல்லையா?''

""இருக்கிறது...''

""அவற்றை சரி செய்கிறாயா?''

""ம்...''

""நீ இறந்துவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?''

""தெரியாது...''

""கோழை என்று பெயர் எடுப்பாய், வாழத் தெரியாதவன் என்று பெயர் எடுப்பாய், உன் குடும்பத்தினரை ஏளன மாய் பார்ப்பர். வாழ பல வழியிருக்கிறது. மரணம் ஒரு முடிவு இல்லை...''

""என்ன சொல்ல வருகிறீர்கள்?''

""நீ சாதிக்க வேண்டியது, செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நீ அவசரப்படுகிறாய், ஒரு நொடியில் கூட உன் வாழ்க்கை மாறும். உனக்கு பொறுமை இல்லை. கையால் சூரியனை தொட அவசரப்படுகிறாய்...''

""இருக்கலாம்...''

""இருக்கலாம் இல்லை; அதுதான் உண்மை. இன்னும் வேகமாய் இயங்கு, வெற்றி உன்னை தேடி வரும். உன்னுடைய குறைகளை முதலில் களைந்தெறி, மற்றவர்களிடம் குறை காண்பதை நிறுத்து. உன் திறமைகளை நினைத்துப் பார். மாறி இயங்கு, எல்லாம் சரியாகும்...''

""அப்படியா?''

""நான் கடவுள்... பொய் சொல்ல மாட்டேன். உன்னை விட பிரச்னை உள்ளவர்கள், பல்லாயிரம் பேர் பூமியில் இருக்கின்றனர். எல்லாரும் உன் முடிவை எடுத்தால் என்ன ஆகும்... வாழ்க்கை என்பது வாழத்தான். இந்த ஜென்மத் தில் நீ அனுபவிக்க வேண்டிய இன்ப, துன்பங்களை முடிக்காமல், வாழாமல் நீ செல்ல முடியாது. அதுதான் தர்மம்...''

""கர்மவினைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை...''

""உனக்கு நம்பிக்கை இருக் கிறதோ, இல்லையோ... கர்மவினை இருக்கிறது. நான் கடவுள் சொல்கிறேன்... உனக்கு நம்பிக்கை இல்லையா?''

""நீங்கள் தான் கடவுள் என்று எப்படி நம்புவது?''

""எதையும் நம்பாதது உன் பிறவி குணம். மரணத்தின் விளிம்பில் உன்னை உட்கார வைத்து, கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல், பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். பூலோகத்திற்கு திரும்பியதும், உனக்கு பரிச்சயமான மனோதத்துவ நிபுணர்களை சந்தித்து, நீ சாப்பிட்ட மாத்திரைகளின் பட்டியலைச் சொல். நீ பிழைத் தது உலகமகா அதிசயம் என் பர்.''

""நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?''

""காலையில் விழிப்பு வரும், வேலைகளை தொடர்ந்து செய். உன் தவறுகளை சரி செய்து கொள். உன்னுடைய திறமையை முழுவதும் வெளிப் படுத்து, பணம் உன்னை தேடி வரும். பின்னால் எல்லாம் வரும். ஒரு நிமிடம் கண்ணை மூடு...''

மூடினேன்; விழித்தேன்.


காலையில் மணி மூன்றரை—

என் மொபைல் போனில், என் நண்பர்களுக்கு அனுப்பிய கடைசி செய்தியைப் படித்தேன்.

எனக்கே சிரிப்பு வந்தது.

கடவுளை சந்தித்து திரும்பினேன் என்று சொன்னால் யாராவது நம்புவரா; சிரிப்பர்.

சிரித்துவிட்டு போகட்டும்.

காலிங்பெல் சப்தம்; திறந் தேன்.

டை கட்டிய இரண்டு பேர் நின்றிருந்தனர்.

""வங்கியிலிருந்து வருகிறோம்...''

""எந்த வங்கி?''

கூறினர்.

""ஆறு தவணை நீங்கள் கட்டவில்லை...''

""வியாபாரத்தில் நஷ்டம், என்னால் கட்ட முடியவில்லை. இன்னும் மூன்று மாதத்தில் சரியாகி விடும்...''

""நீங்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்து கடிதம் எழுதி கொடுங்கள்...''

முகவரியை கொடுத்துச் சென்றனர்.

திரும்பினேன்; பக்கத்தில் யாரோ நிற்பது போல் இருந் தது.

கடவுளா...?

இல்லை!

நம்பிக்கை!


Thanks to Dinamalar Tamil Daily





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக